ஊரே மெச்சிக்க நடந்த விழா; மகாராணிகளாக ஜொலித்த மதுரை முத்துவின் மகள்கள் - களைகட்டிய இல்ல விழா!

Published : Mar 10, 2026, 08:18 PM IST

Madurai Muthu Daughter Function in Tamil : சின்னத்திரையில் பிராபர்ட்டி காமெடி சொல்லி அசத்தும் மதுரை காமெடி ஜாம்பவான் முத்துவின் வீட்டில் ஊரே மெச்சிக்கும் அளவிற்கு விழா நடந்தது. அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
16
Madurai Muthu Second Wife and Daughters

Madurai Muthu Daughter Function in Tamil : அவருடைய பெயர் மதுரை முத்து தான் மதுரையில் இருந்து வந்ததால் இவருக்கு மதுரை முத்து என்று பெயர் வந்தது. மதுரை முத்து மதுரை மாவட்டத்தில் 1976 ஆம் ஆண்டு பிறக்கிறார். தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்தே வந்தவர். இவருக்கு ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியாக பேசி வருகிறார் அதன் மூலம் பல பட்டிமன்றங்களிலும் பேசி தனது திறமைகளை வெளிப்படுத்துகிறார். பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்கிறார். அது நகைச்சுவை திறமைகளால் தனது இடத்தை பதிக்கிறார் மதுரைமுத்து.‌ 

26
Madurai Muthu Daughter Function Video

தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையை முதன்முதலில் கொண்டு வந்தவர் முத்து. அவர் ஒரு பிரபலமான ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் 1200+ மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் சங்கத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியாகவும் பல நிகழ்ச்சிகள் நடித்ததாகவும் கூறப்படுகிறது.தனது தனித்துவமான மதுரை பாஷை நகைச்சுவைக்காக அறியப்படுகிறார். இவர் பல ஸ்டார் விஜய் மற்றும் சன் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

36
முதல் மனைவி

மதுரை முத்து வையம்மாள் என்னும் பெண்மணியை திருமணம் செய்கிறார் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிள்ளையார்பட்டியில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவி கார் விபத்தில் இறந்து விடுகிறார். அதனால் மிகவும் மனம் உடைந்து போன மதுரை முத்து சோகத்தில் மூழ்கி இருந்தார் இரண்டு பெண் குழந்தையும் வைத்து நான் எப்படி வழக்கப் போகிறேன் என்று புலம்பி கொண்டு இருந்தார். அதன் பிறகு இரண்டு மகள்களையும் வைத்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த மதுரை முத்து தன் குழந்தைகள் நலனுக்காக இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து திருமணம் செய்து கொள்கிறார்.

46
இரண்டாவது திருமணம்

முதல் மனைவி இறந்தது பல மேடைகளிலும் சொல்லி அழுது இருக்கிறார் மதுரை முத்து. அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கு தான் அதிகளவு கஷ்டம் இருக்கும் என்றும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். தன் மகள்களுக்காக நீதி என்னும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மதுரை முத்துக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறார். முதல் இரண்டு குழந்தைகளின் பெயர் யாழினி ஸ்ரீ மற்றும் முத்து ஸ்ரீ.

56
பூப்புனித நீராட்டு விழா:

நேற்று தன் இரு மகளுக்கும் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியுள்ளார் மதுரை முத்து. மதுரை முத்து விழா நடத்திய காட்சிகளையும் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பலரும் அவருக்கும் அவரது மகள்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குதிரை தேர், தங்க பல்லாக்கு: தன் மகளை இருவரையும் குதிரை தேரில் உட்கார வைத்து குதிரை ஓட்டி வந்தார் மதுரை முத்து. மண்டபத்துக்குள் வந்ததும் தன் இரு மகள்களையும் தற்காலகிய பிரெண்டிற்கு ஏற்றார் போல் தங்க பல்லாக்கில் ஏற்றி தன் இரண்டு மகள்களையும் பட்டுப் புடவையில் மேடையில் அமர வைத்தார் மதுரை முத்து. விழா கோலாக்கலமாக ஆடலும் பாடலும் ஆக நிறைந்து இருந்தது.

66
Comedian Madurai Muthu Family Function 2026

தன் சொந்தமும் சூலமும் நிறைந்து விழாவை சிறப்பித்தது அது மட்டுமல்லாமல் சினிமா துறையில் இருந்து நாஞ்சில் விஜயன், நடிகர் விமல், நடிகர் ராமராஜன், நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ், விஜய் டிவி ராமர் என்னும் பல இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories