தளபதி விஜய் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும், 90 காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவே இருந்தார்.
அப்போது இவருக்கு கிடைத்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை, கிசுகிசு காரணமாக தவிர்த்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி தயாரிப்பிலும் நடித்திருந்த திரைப்படம் 'நாட்டாமை'.
இதில் ஒரு சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை குஷ்புவும், மற்றொரு சரத்குமாருக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருந்தனர்.
விஜய் நடிக்க இருந்தது சரத்குமார் கதாப்பாத்திரத்தில் இல்லை, சரத்குமாரின் கடைக்குட்டி தம்பியாக நடித்திருந்த நடிகர் ராஜா ரவீந்தரின் கதாபாத்திரத்தில் தான்.
தளபதி பல தடைகளை கடந்து வளர்ந்து வந்த நேரத்தில், அவரை சுற்றி சில கிசுகிசுக்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
அதில் ஒன்று தான் நடிகை சங்கவியுடன் பல படங்களில் ஒன்று சேர்ந்து விஜய் நடித்ததால், இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட சம்பவம். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சங்கவிதான் நடிக்க உள்ளார் என்பதை அறிந்து, அந்த படத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம் விஜய்.