Malavika Sundhar : தன்னை விட இளைய வயது காதலரை கரம் பிடித்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் மாளவிகா! திருமண போட்டோஸ்

First Published | Nov 12, 2021, 1:46 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி (super singer show) மூலம் பிரபலமான பாடகி மாளவிக சுந்தர் (Malavika Sundhar) திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில்,  இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் தனி இடம் உள்ளது. ஊர்.. உலகம்.. அறியாத பல திறமை சாலிகளின் குரல் வளத்தை, மேடை போட்டு இந்த நிகழ்ச்சி பறைசாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய இசை ஞானத்தை வெளிப்படுத்தி திரையுலகில், பின்னணி பாடகர் பாடகியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Tap to resize

இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தவர் மாளவிகா சுந்தர். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மனம் கொத்தி பறவை' திரைப்படத்தில் என்ற பாடலை பாடியதன் மூலம் பல படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது 33 வயதாகும் இவருக்கும் இவரது காதலருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளது.

பிராமணர் முறைப்படி இவருடைய திருமணம் நடந்துள்ள நிலையில், மாளவிகா மற்றும் இவருடைய காதலை அஸ்வின் காஷ்யாப் திருமண புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மளவிகாவை விட அவரது காதலர் ஒரு வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் காதலரை கரம் பிடித்துள்ள மளவிகாவுக்கு, சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!