‘சிறகடிக்க ஆசை’ சீரியல் பிரபலங்களுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம் - அதிகம் வாங்குவது யார்?

First Published | Oct 24, 2024, 9:10 AM IST

Siragadikka Aasai Serial Cast Salary : விஜய் டிவியில் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai

விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக திகழ்ந்து வருவது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. எஸ்.குமரன் இயக்கும் இந்த தொடர் விஜய் டிவியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக வெற்றி வசந்தும், ஹீரோயினாக கோமதிப் பிரியாவும் நடிக்கின்றனர். டிஆர்பி ரேஸில் வார வாரம் சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று.

Siragadikka Aasai Serial

இந்த சீரியல் தான் டிஆர்பியில் டாப் 5 இடத்தை பிடித்து அசத்தியது. இந்த சீரியலின் கதைப்படி பூக்கடையில் வேலை பார்த்த மீனாவை, குடிகாரனான முத்து காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்கு முத்துவின் குடிப்பழக்கத்தை கைவிட வைத்து அவரை கார் டிரைவராக மாற்றி நல்வழிப்படுத்துகிறார் மீனா. இதற்கிடையே இவர்கள் இருவரும் கூட்டுக் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்தது தான் இந்த தொடர்.

இதையும் படியுங்கள்... 'சிங்க பெண்ணே' சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் வாங்கும் சம்பளம்! யாருக்கு அதிகம் தெரியுமா?

Tap to resize

Vijay TV Siragadikka Aasai Serial

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது முத்து மற்றும் மீனாவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதிப் பிரியா தான். இவர்கள் இருவருக்கும் ஒரு எபிசோடுக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முத்துவின் அம்மா, அப்பாவாக நடிக்கும் நடிகர் சுந்தர்ராஜன் மற்றும் நடிகை அனிலா விஜயகுமார் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு தலா ரூ.8 ஆயிரம் வாங்குகின்றனர்.

Siragadikka Aasai Serial Cast and Crew Salary

மனோஜ் ஆக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா ஒரு எபிசோடுக்கு ரூ.6 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார். அதேபோல் ரோகிணியாக நடிக்கும் நடிகை சால்மா அருணுக்கும் ரூ.6 ஆயிரம் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. முத்துவின் இளைய சகோதரன் ரவியாக நடிக்கும் யோகேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ருதியாக நடிக்கும் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...  சப்பாத்தியில் உப்பு; ஜாக்குலின் உருவ கேலி செய்து சௌந்தர்யா அடித்த கமெண்ட்!

Latest Videos

click me!