விஜய் டிவி சீரியல் நடிகைக்கு காதலருடன் நடந்த நிச்சயதார்த்தம்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து ..!

First Published | Sep 30, 2020, 6:18 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றின் மொழி' சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் அவரது காதலருக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
 

சமீப காலமாக சீரியல் நடிகைகளுக்கும், வெள்ளித்திரை நாயகிகளுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக விஜய் டிவி சீரியல் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
காரணம், இதில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது தான்.
Tap to resize

இந்நிலையில் விஜய் டிவியில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா இணைந்து நடித்து வரும் 'காற்றின் மொழி' சீரியலில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி ராஜேந்தர்.
இவர் கடந்த சில வருடங்களாக சாய் விக்னேஷ்வர் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு தற்போது எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டுள்ளார் வைஷ்ணவி.
எளிமையான முறையில் நடந்த இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!