உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், அடுத்த மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அடுத்தடுத்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்பதற்காக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமாக கருத்தப்பட்ட நபர் நடிகை லட்சுமி மேனன், தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவதற்காக உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய அவர், மார்டன் உடையில் ரக ரகமாய் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் லட்சுமி மேனன் அதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கடுப்பான லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளீச் பதில் கொடுத்திருந்தார்.
அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக தொடர்ந்து வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். எச்சில் தட்டுகளை கழுவுவதும், டாய்லெட் கழுவுவதற்கும் நான் ஆளில்லை . அதேபோல் கேமரா முன் பொய்யாக நின்று சண்டை போடுவது எனக்கு பிடிக்காத ஒன்று எனவே இந்தமாதிரி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை” என்பதை தெரிவித்துள்ளார்.
இதனால் பிக்பாஸ் இவருக்கு பதிலாக நடிகை காயத்ரியை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர், சமீபத்தில் மார்டன் உடைகளில் ஓவர் கிளாமராக போட்டோ ஷூட்களை நடத்தி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரைத் தான் லட்சுமி மேனனுக்கு பதிலாக களம் இறக்க விஜய் டிவி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.