2 வருடங்களுக்குப் பிறகு... முதல் முறையாக இரட்டை குழந்தைகள் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய விஜய் டி.வி. பிரபலம்!

First Published Apr 2, 2021, 3:48 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில், சின்னத்தம்பி சீரியலில் நடித்து பிரபலமான ப்ரஜின் தற்போது அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார். இவர் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின், தன்னுடைய இரட்டை குழந்தைகள் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் பிரபலமானவர் ப்ரஜின், மெல்ல மெல்ல தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, சின்னத்திரை சீரியல் நடிகராக மாறினார்.
undefined
2005 ஆண்டு ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை' சீரியலில் நாயகனாக நடித்தார். பின்னர், பெண், காதலிக்க நேரமில்லை, 'அஞ்சலி', உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். இதை தவிர ஜோடி நம்பர் ஒன், போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு கலக்கினார்.
undefined
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். ஆனால் இவரால்... சின்னத்திரையில் வெற்றிபெற முடிந்த அளவிற்கு திரையுலகில் நிலைக்க முடியவில்லை. எனவே தற்போது மீண்டும் சின்னத்திரை நாயகனாகவே மாறியுள்ளார்.
undefined
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர் 'சின்னத்தம்பி' சீரியலில் நடித்த ப்ரஜின் தற்போது 'அன்புடன் குஷி' சீரியலில் நடித்து வருகிறார்.
undefined
இந்நிலையில் இவர், நடிகையும் தொகுப்பாளருமான சாண்ட்ரா என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், வேலை காரணமாக நீண்ட நாட்கள் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
undefined
மித்ரா - ருத்ரா என பெயரிடப்பட்டுள்ள இவர்களின் தற்போதைய புகைப்படங்களை இதுவரை முகம் தெரியாதவாறு மட்டுமே வெளியிட்டு வந்த இவர்கள்... நீண்ட நாள் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று குட்டி தேவதைகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர்.
undefined
சுமார் இரண்டு வருடத்திற்கு பின்னரே இவர்கள் தங்களது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
undefined
இருவருமே பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர்களின் புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
click me!