தன் பாடலை திருடியதாக சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த... பாடகி மதுரமல்லி திடீர் மரணம்!

First Published Apr 2, 2021, 12:59 PM IST

தான் எழுதி, பாடிய நாட்டுப்புற பாடலை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி...  வேறு ஒருவர் பாடியதாக கூறி பொய் பரப்புரையில் ஈடுபடுவது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்த நாட்டுப்புற பாடகி மதுரமல்லி திடீர் என மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமியை போல் நாட்டுப்புற பாடகி மதுர மல்லி என்பவர், பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவர் "மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது" என்ற பாடலை பாடி அதன் வீடியோவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே யூடியூபில் வெளியிட அது இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
undefined
இந்நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழாவில் பாடிய நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் ஜோடி "மாமான்னு கூப்பிட தான் மனசு சொல்லுது" என்கிற பாடலை, தன்னுடைய தங்கை கலைவாணி என்பவர் தான் இயற்றி பாடியதாக கூறிவிட்டனர் என புதிய சர்ச்சையை கிளப்பினார் மதுர மல்லி.
undefined
இதனால் ஆத்திரம் அடைந்த இந்த பாடலை இயற்றி, பாடிய, மதுர மல்லி தன்னுடைய பாடலுக்கு வேறு ஒரு பெண்ணை சொந்தம் கொண்டாட வைப்பது மிகவும் கீழ்த்தரமானது என்றும், இதற்க்கு அவர் வெட்கப்பட வேண்டும் என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.
undefined
தன்னுடைய பாடலுக்கு வேறு ஒருவரை சொந்தம் கொண்டாட வைத்துள்ளது தன்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனஉளைச்சலில் தள்ளியுள்ளதாகவும். ராஜலட்சுமி தன்னுடைய தவறை உணர்ந்து, கூறிய வார்த்தையை வாபஸ் பெறுவது மட்டும் இன்றி, அதற்க்கு உரிய விளக்கமும் கொடுக்க வேண்டு என, மதுர மல்லி தெரிவித்துள்ளார்.
undefined
பின்னர் இந்த சர்ச்சைக்கு ராஜலட்சுமியும் விளக்கம் அளித்தார். அதில் சிவன் கோவில் குடமுழுக்கு விழாவில் அந்த பெண் எழுதி, பாடியது ஒரு சிவன் பாடம் என்றும், அதனை தவறுதலாக எடிட் செய்து போட்டதால் இந்த பிரச்சனை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எடிட் செய்யாமல் உள்ள முழு வீடியோவையும் ராஜலட்சுமி வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
undefined
அதே போல் தான் அந்த பாடலை சுட்டதாக குற்றம் சாட்டிய மதுர மல்லிக்கும் இது குறித்து விளக்கம் தெரிவித்ததாக கூறியுள்ளார் ராஜ லட்சுமி. இந்நிலையில் திடீர் என மதுரமல்லி மாரடைப்பு காரணமாக, காலமாகியுள்ளது நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இவர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, மதுரமல்லி தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!