கர்ப்பமாக இருக்கிறாரா? விஜய் டிவி சீரியலில் ஹீரோவை தொடர்ந்து வெளியேறிய நடிகை!

Published : Oct 19, 2025, 12:33 PM IST

Sakthivel Serial Actress: விஜய் டிவி சீரியலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'சக்தி வேல்' சீரியலில் இருந்து அடுத்தடுத்து 2 பிரபலங்கள் வெளியேறி உள்ளனர்.

PREV
16
முடிவுக்கு வந்தது சக்திவேல்:

TRP ரேட்டிங்கில் சன் டிவிக்கு ஒவ்வொரு வாரமும் டஃப் கொடுத்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சக்தி வேல்' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த தொடரின் முதல் சீசன் முடிவுக்கு வந்துவிட்டதாகவும்... இரண்டாவது சீசன் அடுத்து ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியானது.

26
பிரவீனுக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பு:

முதல் சீசனில், வேலு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரவீன் ஆதித்யா. இவர் சில திரைப்படங்களிலும் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்தவர். விபத்தில் சிக்கி மீண்ட பின்னர்... மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடிய போது தான் பிரவீனுக்கு விஜய் டிவி சீரியலில் இருந்து நடிக்க அழைப்பு வந்தது. கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்து கொண்ட பிரவீன், இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

36
சக்திவேல் தொடரின் 2-ஆம் பாகம்:

3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில், சக்தியின் தங்கை தன்னுடைய அண்ணனை கொலை செய்ததை மறைத்து, கொலை பழியை தான் ஏற்றுக்கொண்டு வேலு ஜெயிலுக்கு செல்வது போலவும், சக்தி... வேலுவை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து தலை முழுகுவது போலவும் காட்டப்பட்டது. விதியின் வசத்தால் பிரிந்த இவர்கள்... இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து, 'சக்திவேல்' சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளது.

46
புதிய ஹீரோ விக்ரம் ஸ்ரீ:

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் இருந்து, ஹீரோவாக நடித்து வந்த பிரவீன் ஆதித்யா ஒரு சில காரணங்களுக்காக வெளியேறிய நிலையில், தற்போது ஹீரோவாக 'ஆஹா கல்யாணம்' சீரியலில் நடித்து பிரபலமான விக்ரம் ஸ்ரீ நடிக்க கமிட் ஆகி உள்ளார். இவர் தான் இரண்டாவது சீசனில் வேலுவாக நடிக்க உள்ளார்.

56
சந்தியா வெளியேறினார்:

பிரவீனை தொடர்ந்து , 'சக்திவேல்' தொடரின் இரண்டாவது பாகத்தில் இருந்து மற்றொரு பிரபல நடிகையும் வெளியேறி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. வேலுவின் அண்ணன் தென்னரசுவுக்கு மனைவியாக நடித்த சந்தியா தான். இவர் நடன இயக்குனர் சாந்தியின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலிலும் இருவரும் மாமியார் - மருமகள் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்கள்.

66
கர்ப்பமாக இருக்கிறாரா சந்தியா?

சந்தியா தன்னுடைய சொந்த காரணத்திற்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இந்த தகவல் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதி செய்துள்ள சந்திக்க, தன்னுடன் இந்த சீரியலில் பணியாற்றிய அனைவருக்கும் உருக்கமான நன்றியையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? அதனால் தான் இந்த முடிவா என்கிற கேள்வியை எழுப்பி வருவதோடு... வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். கூடிய விரைவில் சந்தியாவே இதற்க்கு விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் சந்தியாவுக்கு பதிலாக, நடிகை சஹானா நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories