விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி ஒரே ஒரு பாடல் மட்டும் பாடி இருக்கிறார். அது என்ன பாட்டு என்பதை பார்க்கலாம்.
பிரியங்கா தேஷ்பாண்டே, விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்பட ஏராளமான ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதம் அருமையாக இருக்கும். இவர் தொகுப்பாளியாக மட்டுமின்றி விஜய் டிவியின் பிரைம் ரியாலிட்டி ஷோக்களான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகியவற்றிலும் களமிறங்கி கலக்கினார். பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்துகொண்டு பைனல் வரை சென்ற பிரியங்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னராகவும் தேர்வானார்.
24
பாடும் திறமையை வெளிப்படுத்திய பிரியங்கா தேஷ்பாண்டே
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, அதில் தன்னுடைய பாடும் திறமையையும் வளர்த்துக் கொண்டார். இவர் சூப்பர் சிங்கரில் முதன்முதலாக மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம்பெற்ற Who is The Hero பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார். அவருக்குள் இப்படி ஒரு திறமையா என நடுவர்களே வியந்து பார்த்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. சூப்பர் சிங்கரில் பல முறை பாடி இருக்கும் பிரியங்காவுக்கு சினிமாவில் ஏன் யாரும் பாட வாய்ப்பு தருவதில்லை என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.
34
பிரியங்கா தேஷ்பாண்டே பாடிய சினிமா பாடல்
ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பிரியங்கா தேஷ்பாண்டே சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் பாடிய பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தின் மூலம் தான் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் பிரியங்கா. அப்படத்தில் இடம்பெறும் மதுர பளபளக்குது என்கிற பாடலை நிவாஸ் கே பிரசன்னா, விஜய் சேதுபதி மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் பாடி இருக்கிறார். அந்த சூப்பர் ஹிட் பாடல் இன்றளவும் எந்த ஊர் திருவிழாவாக இருந்தாலும் தவறாமல் இடம்பெற்றுவிடும். அந்த அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடலை பாடிய பிரியங்கா, அதன் பின் சினிமாவில் பாடவே இல்லை.
பிரியங்கா தேஷ்பாண்டேவை அந்த பாடல் பாட தேர்வு செய்ததன் பின்னணியை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்தப் பாடலுக்கு ஒரு அராத்தான வாய்ஸ் தேவைப்பட்டது. நான் சூப்பர் சிங்கர் பேண்டில் பணியாற்றி இருக்கிறேன். அதனால் பிரியங்காவை பற்றி எனக்கு தெரியும். அவரின் பாடும் திறமையும் பார்த்திருக்கிறேன். அதனால் தான் அவரை அந்தப் பாடல் பாட வைத்தேன். ஆனால் அதன் பின் அவர் எந்த படத்திலும் பாடவில்லை. விரைவில் பாடுவார் என எதிர்பார்க்கிறேன் என இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூறி உள்ளார்.