பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றம்... புதிதாக இணைந்த ‘ரியல்’காதல் தம்பதி...!

First Published | Sep 26, 2020, 2:54 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரையும் அதிரடியாக கவரும் வண்ணம் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஓன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமேஉண்டு.
ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி பாசம் பற்றி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன்தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
Tap to resize

தமிழில் மட்டுமல்ல இந்த சீரியல் தெலுங்கு, கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கான பேன்ஸ் படை பெரியது.
சமீபத்தில் இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே அவர் மீண்டும் சீரியலுக்கு வரஇன்னும் சில மாதங்களாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாவின் கதாபாத்திரம் இல்லாததால் சீரியலுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக கடைக்குட்டி கண்ணணுக்கு புது ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்ய சாய் கிருஷ்ணா என்பவரை களமிறங்கியுள்ளனர்.இவர் ஏற்கனவே ஜீ தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல சீரியல்களில் நடித்தவர்.
அவரைத் தொடர்ந்து தற்போது யோகேஸ்வரன் - மைனா நந்தினி ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நிஜ கணவன், மனைவியான இந்த ஜோடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடியெடுத்து வைப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!