பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது கடந்த சில நாட்களாக பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் குமரவேலுவின் கொலை தான். அரசியை காப்பாற்ற இரும்பு தோசை சட்டியால் குமரவேலுவின் தலையில் மீனா அடிக்க, அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜீ, மீனா, கோமதி மூவரும் அவர் இறந்துவிட்டதாக எண்ணிக் கொண்டனர். ராஜீயோ மூச்சு இருக்கிறதா என்று பார்க்க மூச்சு இல்லை என்பது தெரிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
26
மீனாவதி காப்பாற்ற நினைக்கும் செந்தில்:
மேலும், ராஜீ கதிருக்கு போன் போட்டு நடந்தவற்றை சொல்ல, மீனாவோ செந்திலிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். அதுமட்டுமின்றி நான் ஜெயிலுக்கு போக போறேன் என்றும், போலீசுக்கு போன் போடபோறேன் என்றும் சொல்லி அழுதுள்ளார். ஆனால், செந்தில் உன்னை ஜெயிலுக்கு எல்லாம் விடமாட்டேன், உனக்கு பதிலாக நான் ஜெயிலுக்கு போக போறேன் என்றெல்லாம் இருவரும் பேசிக் கொண்டிக்க செந்திலும், கதிரும் உடனடியாக அம்பாசமுத்திரம் புறப்பட்டனர்.
வரும் வழியியெல்லாம் மீனாவைப் பற்றி தான் பேசிக் கொண்டு வந்தார்கள். கோமதி நான் எல்லாவற்றையும் பார்த்து முடித்தவள். உனக்கு பதிலாக நான் ஜெயிலுக்கு போறேன். நீ வாழ வேண்டிய வயசு, சின்ன பொண்ணு என்று மீனாவிற்காக பரிந்து பேசுகிறார். இதற்கிடையில் எல்லா பிரச்சனையும் என்னால் தான் வந்தது என்று அரசி ஒரு பக்கம் பேச, இப்படியே ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க செந்திலும் கதிரிலும் கிட்டத்தட்ட அம்பாசமுத்திரம் நெருங்கிவிட்டார்கள்.
இதையடுத்து ராஜீ தனது மொபைலை எடுக்க சென்ற போது குமரவேலுவின் கை அசைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், எல்லோரையும் வரச்சொன்னார். எல்லோரும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை விரல் அசைந்தது. மேலும், மூச்சு இருக்கிறதா என்று பார்த்து உறுதி செய்தனர். நல்லவேளை குமரவேல் சாகவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார், நான் கொலை செய்யவில்லை என்று மீனா ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
அதுமட்டுமின்றி ராஜீயிடம் நீ தான் பார்த்து சொன்ன என்று பயத்தில் அவருடன் வாக்குவாதம் செய்தார். பதற்றத்தில் தான் அப்படி பார்த்து சொன்னதாக ராஜீ ஒப்புக் கொண்டார். எது எப்படியோ நான் அவனை கொலை செய்யவில்லை என்ற சந்தோஷம் மீனாவை வேறு மாதிரி காட்டியது. இறுதியாக செந்திலுக்கும், கதிருக்கும் போன் போட்டு விஷயத்தை சொல்லும்படி கோமதி அறிவுறுத்துகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 467ஆவது எபிசோடு முடிவடைகிறது.
66
அரசி மற்றும் சதீஷின் லவ் டிராக்:
இனி நாளை நடைபெறும் 468ஆவது எபிசோடில் மயக்க நிலையிலிருந்து குமரவேலு எழுந்திருக்கும் போது அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இதைத் தொடர்ந்து ராஜீ தான் ஆசைப்பட்டபடி டான்ஸ் போட்டியில் பங்கேற்பார். அதுமட்டுமின்றி, தனது டான்ஸை கதிர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது நிறைவேறும். இதோடு அரசி மற்றும் குமரவேல் கான்செப்ட் முடிந்து, அரசி மற்றும் சதீஷின் லவ் டிராக் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.