விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், அண்ணன் - தம்பி பாசம் என விதவிதமாக சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சீரியல்களில் ஒன்று “காற்றின் மொழி”.
இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் உடன் பிரியங்கா என்பவர் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிறிய வயதில் இருந்தே, அப்பாவால் ஒதுக்கப்படும் நாயகி எப்படி அப்பாவின் பாசத்தை எப்படி அடைகிறார் என்கிற கதையை, சுவாரஸ்யமான காதல், செண்டிமெண்ட், போன்றவற்றை உள்ளடக்கி கூறி வருகிறார் இயக்குனர்.
தற்போது இந்த சீரியலில் இது வரை அப்பாவின் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்த கண்மணியை, தன் மகள் என ஊரறிய பஞ்சாயத்து வைத்து அறிவித்து பாசத்தை தந்தை பொழிந்து வருவதால், இந்த சீரியல் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு முக்கிய மாற்றம் நடந்துள்ளது. ஏற்கனவே, இந்த சீரியலில் நாயகி கண்மணிக்கு அம்மாவாக நடித்து வந்த கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது வில்லியாக நடித்து வரும், தீபிகா கதாபாத்திரத்தின் அம்மா கதாபாத்திரமும் மாற்றப்பட்டுள்ளது.