விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடியவர் பவித்ரா லட்சுமி.
முதல் சீசனில் ரம்யா பாண்டியன் பின்னால் சுற்றிய புகழ், இரண்டாவது சீசனில் பவித்ரா மற்றும் தர்ஷாவை என இரண்டு பேரிடமும் காமெடி செய்து சுற்றி சுற்றி வந்ததை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
பிரபல மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி, நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய சென்ற பின்னர் மீண்டும், வயல் கார்டு சுற்று மூலம் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய பட்டுள்ளார்.
தற்போது சின்னத்திரையின் மூலம் கிடைத்த வரவேற்ப்பின் காரணமாக, சதீஷுக்கு ஜோடியாக... 'நாய் சேகர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மற்ற சில படங்களிலும் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் பவி, அவ்வப்போது ஓவர் கவர்ச்சி காட்டாமல் அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் நீண்ட கைகள் கொண்ட லாங் சல்வார் அணிந்து ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... என்ன இவ்வளவு பெரிய கையா... என சில ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.