திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.
மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது வெள்ளை நிற சேலையில் கொள்ளை அழகுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எப்போதும் காட்டும் கவர்ச்சியை கட்டுக்குள் வைத்து, சிங்கிள் பிளீட் சேலை கட்டி... தேவதை போல் மின்னல் வெட்டும் அழகில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவிதைகளால் இவரை வர்ணித்து வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.