மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், ஷாருகான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம், அக்ஷய் குமாருடன் நடிக்க இருந்த விளம்பரப்படம் என அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு மும்பை வந்து சேர்ந்தார் ஷாருகான்.
மேலும் ஆர்யன் கான், ஜெயில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுத்ததால் சாப்பாடு கொடுக்க ஷாருகான் குடும்பத்தினர் சிறப்பு அனுமதி கேட்டபோது NCB அதிகாரிகள் அதற்க்கு ,மறுத்துவிட்டனர். கௌரிகான் ஆசையாக மகனுக்கு எடுத்து வந்த உணவையும் கொடுக்க மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.
எனவே ஆர்யன் கான் பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறப்பட்டது. பல முறை மகனை வெளியே கொண்டு வர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும், அவை நிராகரிக்கப்பட்டது ஷாருகானை மட்டும் இன்றி அவரது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஷாருகான் சரியான சாப்பாடு தூக்கம் இன்றி வீட்டிற்குள்ளேயே முடங்கினார். கௌரி கான் தன்னுடைய மகன் வெளியே வந்த பிறகு தான் இனிப்புகள் வீட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என ஆர்டர் போட்டார். ஆர்யனின் சகோதரி சுகானா தன்னுடைய சகோதரரை பற்றி கவலை பட்டு கொண்டு அடிக்கடி போன் போட்டு விசாரித்து வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஒருவழியாக ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால், 3 வாரத்திற்கு பின்னர் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.