நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) ஸ்டோரியில் பெற்றோர்களால் திருமணத்திற்கு தயார் படுத்தப்படும் பெண்கள் குறித்து, ஆக்கபூர்வமான கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெற்றோர் பலர் தங்களுடைய பெண்களை என்னதான் படிக்க வைத்தாலும், அவர்களுடைய திருமணத்திற்கு என்று பெரும் தொகையை சேர்த்து வைப்பது இயல்பாகவே மாறிவிட்டது.
சிலர் பெண்கள் அவர்களது மகள் உயர் கல்வி படிக்க ஆசை பட்டாலும், திருமண செலவை கருத்தில் கொண்டு படிக்க வைக்க மறுத்து விடுவதும் உண்டு.
இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவரான ராணி ராம்பால் பெண் குழந்தைகள் கல்வி, அவர்களின் பொருளாதார ரீதியான சுதந்திரம் போன்றவை அவர்களை அதிக நம்பிக்கையை மாற்றும் என்பது குறித்த தகவலை பகிர்ந்திருந்தார்.
இதில் உங்கள் மகள்களை மிகவும் திறமையானவர்களாக ஆக்குங்கள், அவளை யார் திருமணம் செய்வது என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவளுடைய திருமண நாளுக்காக பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அவளுடைய கல்விக்காகச் செலவிடுங்கள். மிக முக்கியமாக, அவளை ஒரு திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கு பதிலாக, அவளை வளர்த்து தயார்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் இருக்க அவளுக்குக் கற்றுக் கொடுங்கள் என எழுச்சியூட்டும் பதிவை போட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த ஸ்டோரி பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பின்னர், தற்போது சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் இவர் கவனத்தை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.