Priyanka Deshpande : ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா...! தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Apr 26, 2022, 04:00 PM IST

priyanka deshpande : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்கா, தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

PREV
15
Priyanka Deshpande : ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா...! தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர் என்றே கூறலாம். அந்த வகையில், தொகுப்பாளினிகளில் திவ்யதர்ஷினி என்கிற டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய துறுதுறு பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

25

இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதுதவிர ஒல்லி பெல்லி, ஸ்டார்ட் மியூசிக், தி வால் போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். 

35

தொகுப்பாளினி பிரியங்காவுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலுத்து திருமணம் செய்துகொண்டார். 

45

பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை முன்னேறிய பிரியங்கா, டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு 2-ம் இடத்தைப் பிடித்தார். 

55

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ.2 லட்சம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அசுரன் தனுஷையே மிஞ்சிடுவார் போல.... செல்வராகவனின் மிரட்டலான நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ - வைரலாகும் டிரைலர்

Read more Photos on
click me!

Recommended Stories