விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன் குறுகிய காலத்திலேயே... வானொலி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி மிகவும் பிரபலமானவர்.
இவரது ஸ்டைலிஷான தமிழ் உச்சரிப்பு, ஆங்கில புலமை போன்றவை பாவனாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது...
தொலைக்காட்சி நிகழ்ச்சி தேடி வர துவங்கியது. அந்த வகையில், ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை துவங்கினார்.
அவர் தொகுத்து வழங்கிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும். பின்னர், அவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார்.
பின்னர் 2011ஆம் ஆண்டில் இருந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் முழுநேர தொகுப்பாளினியாக மாறினார். விஜய் தொலைக்காட்சியில் அவரது முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகும்.
மேலும், அவர் 2018 வரை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் "ஃபன் அன்லிமிடெட்" உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
2017 ஆம் ஆண்டில், அவர் விளையாட்டு பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார். மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் புரோ கபடி லீக் ஆகியவற்றின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார்.
அவர் 2018 ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றினார் மற்றும் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு பெண் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பாளினி என்பதை தான் பாவனா பாலகிருஷ்ணன் 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமானார், தனது முதல் தனிப்பாடலான தி மாஷப் தொடரை வெளியிட்டார் .
2020 ஆம் ஆண்டில், இசை இயக்குனர் தரனுக்காக தனது முதல் பின்னணி பாடலைப் பாடினார். "வீராதி வீரா" பாடல் யூடியூபில் ஐந்து இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வரும் இவர், தொடர்ந்து... ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் விதவிதமான புகைப்படங்களை வெளிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ