அட்ராசக்க... மீண்டும் ஆரம்பமாகும் வாத்தி ரெய்டு - முதன்முறையாக ஜப்பானில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ள விஜய் படம்

Published : Oct 30, 2022, 03:14 PM IST

ஜப்பானில் தமிழ் படங்களுக்கு அதிக மவுசு உண்டு, குறிப்பாக அங்கு ரஜினிகாந்த் நடித்த படங்கள் சக்கைப்போடு போடுவதோடு அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். 

PREV
14
அட்ராசக்க... மீண்டும் ஆரம்பமாகும் வாத்தி ரெய்டு - முதன்முறையாக ஜப்பானில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ள விஜய் படம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இவர் அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

24

இயக்குனர் லோகேஷ் கனாகராஜ் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றினர். லோகேஷ் கனகராஜை முன்னணி இயக்குனராக உயர்த்தியதும் இந்த படம் தான். இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டது.

34

கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் தியேட்டருக்கு செல்லவே பயந்து வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களை மீண்டும் தியேட்டருக்கு வரவைத்து திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுத்த படம் தான் மாஸ்டர். வசூலைக் வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் தற்போது அடுத்தகட்டத்திற்கு செல்ல உள்ளது. அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... திருமண மேடையில் கவின்... கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்

44

அது என்னவென்றால், மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது. ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்செய் (Sensei) என பெயரிட்டுள்ளனர். சென்செய் என்றால் ஜப்பானிய மொழியில் வாத்தி என அர்த்தம். இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி அங்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஜப்பான் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.

ஜப்பானில் தமிழ் படங்களுக்கு மவுசு அதிகம். குறிப்பாக அங்கு நடிகர் ரஜினியின் படங்கள் சக்கைப்போடு போடும். இதனால் அங்கு ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் ஜப்பானில் ரிலீசான நிலையில், தற்போது மாஸ்டரும் வெளியாக உள்ளதால் அவர் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்திருக்கேன்..சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய ஷங்கர் மருமகன் பரபரப்பு அறிக்கை

Read more Photos on
click me!

Recommended Stories