திருமண மேடையில் கவின்... கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்
ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட நடிகர்கள் என்றால் அது ஹரீஷ் கல்யாண் மற்றும் கவின் தான். இதில் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் முதல் சீசனிலும், கவின் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டனர். இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே ஹரீஷ் கல்யாணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. நர்மதா உதயகுமார் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்திருக்கேன்..சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய ஷங்கர் மருமகன் பரபரப்பு அறிக்கை
இந்த விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களது காதலும் முடிவுக்கு வந்தது. இதனை லாஸ்லியாவே பேட்டி ஒன்றில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறினார்.
காதல் முறிவுக்கு பின்னர் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான். இந்த விழாவில் கவின் சிங்கிளாக வந்து மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடிகை லாஸ்லியா கவர்ச்சி உடை அணிந்து வந்து அதிர்ச்சி கொடுத்தார். லாஸ்லியாவின் இந்த கவர்ச்சிகரமான எண்ட்ரி யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அவரின் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் கொடுத்திருக்கேன்... பிக்பாஸ் பிரபலம் சொன்ன பகீர் தகவலால் ஷாக்கான ரசிகர்கள்