இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்போம். நம்முடைய கொடிக்கும் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. அது என்ன என்பதை நமது மாநாட்டின் போது அறிவிப்போம். அதுவரைக்கு சந்தோஷமா, கெத்தா இந்த கொடியை ஏற்றி கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்.