Published : Aug 07, 2025, 11:39 PM ISTUpdated : Aug 07, 2025, 11:40 PM IST
Thalaivan Thalaivii World Wide Box Office Collection: விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் உலகளவில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Thalaivan Thalaivii World Wide Box Office Collection: குடும்பக் கதைக்கு பெயர் போன இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தலைவன் தலைவி. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்திருந்தார்.
இதற்காக அவர் பயிற்சியும் பெற்றிருந்தாக இண்டர்வியூ ஒன்றில் அவரே கூறியிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா சங்கர், மைனா நந்தினி, சரவணன், ஆர்கே சுரேஷ், செம்பன் வினோத் ஜோஸ், காளி வெங்கட் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
24
தலைவன் தலைவி திரைப்படப் பாடல்,
இந்தப் படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பையே நடித்திருந்தனர். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விவாகரத்து சம்பவங்கள், கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சண்டை, சச்சரவுகள் என்று எல்லாவற்றையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேரிய மனைவியை சமாதானப்படுத்தி திரும்ப வீட்டிற்கு கூட்டி வருவதும் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டு செல்வதும் பொதுவாக திருமணமான பிறகு நடக்கும் இயல்பான ஒன்று தான்.
ஆனால், இந்தக் கதையில் விவாகரத்து வரை சென்று கோர்ட்டும் விவாகரத்து கொடுக்க அதன் பின்னரும் கணவன் மனைவி இருவரும் மிண்டும் ஒன்று சேர்ந்து வாழும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
34
தலைவன் தலைவி கதை, தலைவன் தலைவி விமர்சனம்,
இந்த நிலையில் தான் உலகம் முழுவதும் வெளியானை தலைவன் தலைவி படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. இந்திய அளவில் ரு.50 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது
44
தலைவன் தலைவி, விஜய் சேதுபதி
இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் மட்டுமே உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஜா படத்திற்கு பிறகு வெளியான விஜய் சேதுபதியின் எந்தப் படமும் பெரியளவில் வசூல் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.