டிஎஸ்பி படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... டார்ச்சர் தாங்க முடியாமல் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

Published : Dec 08, 2022, 02:36 PM IST

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் நடிகர் விஜய் சேதுபதி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

PREV
14
டிஎஸ்பி படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... டார்ச்சர் தாங்க முடியாமல் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். அப்படத்திற்கு பின் இவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், உப்பென்னா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டன.

24

இவர் வில்லனாக நடிக்க தொடங்கிய பின்னர் இவரது ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். கடந்த 5 ஆண்டுகளில் இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளன. ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதியை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதும் இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... அவதார் பட பாணியில்... ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் விஜய்யின் வாரிசு பட டிக்கெட் முன்பதிவு

34

ஆனால் விஜய் சேதுபதியோ தனக்கு இருக்கும் ஹீரோ அந்தஸ்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து கடந்த வாரம் ரிலீசான படம் டிஎஸ்பி. பொன்ராம் இயக்கிய இப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவரது ரசிகர்களே, விஜய்சேதுபதி ஏன் இப்படி ஒரு படத்தில் நடித்தார் என கேட்கும் அளவுக்கு படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

44

இப்படி நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், படம் ரிலீசான மறுநாளே படக்குழுவினருடன் இணைந்து விஜய் சேதுபதி கேக்வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது நெட்டிசன்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதையடுத்து அப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்யத்தொடங்கினர். இதனால் அப்செட் ஆன விஜய் சேதுபதி, டிஎஸ்பி படத்தை பற்றி தான் பதிவுடும் டுவிட்களுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி கமெண்ட் செக்சனை ஆஃப் செய்துவிட்டு தான் டுவிட் செய்கிறார். நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை தாங்க முடியாமல் தான் விஜய் சேதுபதி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories