விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட ஹீரோயின்!

Published : Apr 16, 2025, 12:23 PM ISTUpdated : Apr 16, 2025, 12:29 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், பிரபல பாலிவுட் நடிகை இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட ஹீரோயின்!

பூரி ஜெகன்நாத்:

தெலுங்கு திரையுலகில் கமர்ஷியல் இயக்குநர் என பெயர் எடுத்தவர் பூரி ஜெகன்நாத். 2000-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'பத்ரி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை திரையுலகில் பதிவு செய்தார். பவன் கல்யாணுக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
 

25
Puri Jagannadh Last year movie:

லைகர் & டபுள் ஐ ஸ்மார்ட்:

இதை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே அதிக படங்களை இயக்கி வந்த இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார். அதே போல் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் கடந்த 2022-ல் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து இயக்கிய, லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் ராம் பொத்தினேனியை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய, டபுள் ஐ ஸ்மார்ட் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

35
Puri Jagannadh and Vijay Sethupathi Movie:

விஜய் சேதுபதியை வைத்து எடுக்கப்பட உள்ள திரைப்படம்:

தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, தன்னுடைய கனவு படத்தை இயக்கி - தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளர். பான்-இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள இந்த படம் குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.  மேலும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து சார்மி கவுறும்  இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

45
Radhika Apte :

ராதிகா ஆப்தே:

ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள புதிய நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம். Radhika Apte to pair up with Vijay Sethupathi in Puri Jagannath movieகிட்ட தட்ட இது இரண்டாவது நாயகி கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. பாலிவுட் திரைப்படங்களில் கூட, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கும் ராதிகா ஆப்தே கதையை கேட்டதுமே நடிக்க ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

55
June Month Shooting started:

ஜூன் மாதத்தில் தொடங்கும் படப்பிடிப்பு:

மேலும் விஜய் சேதுபதியும் இதற்க்கு முன் ஏற்று நடித்திடாத வித்தியாசமான ரோலில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இப்படம் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும்,  ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories