'மாஸ்டர்' படத்தில் JD வளர்த்த புசு புசு பூனை இவருடையதா? புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகர்!

First Published Jan 31, 2021, 11:07 AM IST

தளபதி விஜய் நடிப்பில், பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ’மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின், திரையரங்கில் வெளியான முன்னணி நடிகர் படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.  
 

தளபதி விஜய் நடிப்பில், பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ’மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின், திரையரங்கில் வெளியான முன்னணி நடிகர் படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.
undefined
உலகம் முழுவதும் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம், இரண்டே வாரங்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்து சாதனை செய்ததாக கூறப்பட்டது.
undefined
மேலும் படம் வெளியான ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
undefined
இந்த நிலையில் இந்த படத்தில் JD கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் பூனை ஒன்றை வளர்த்து வருவார்.
undefined
தளபதி ரசிகர்கள் எப்படி விஜய்யை ரசித்தார்களோ, அதே போல் இந்த புசு புசு Persian ரக பூனையையும் அதிகம் ரசித்தனர்.
undefined
இந்த பூனை யாருடையது என, விஜய் ரசிகர்கள்.... 'மாஸ்டர்' படம் வெளியான நாள் முதலே கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
undefined
விஜய்யின் கல்லூரி நண்பர்களில் ஒருவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பவருமான நடிகர் சஞ்சீவ் தான் இந்த பூனையை வளர்த்து வருகிறாராம்.
undefined
’மாஸ்டர்’ படத்தில் ஜேடி வளர்த்த பூனை தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளது என சஞ்சீவ் புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!