கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் நிறைவடைந்த போதும், இடையில் வந்த கொரோனா பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு படத்தை தியேட்டரில் இறங்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது.
அதேபோல் மாஸ்டர் திரைப்படத்திற்கும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஜகமே தந்திரம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதியாக கூறிவந்தார்.
அதேபோல் மாஸ்டர் திரைப்படத்திற்கும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஜகமே தந்திரம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதியாக கூறிவந்தார்.
இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
தற்போதைய நிலவரப்படி ரசிகர்கள் பகிர்ந்து வரும் ட்வீட்டில் #ShameOnUYNot என்ற நெகட்டீவ் ஹேஷ்டேக் தனுஷ் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டால் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுக்கும் என்றும், கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வார்கள் என்றும் சிலர் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.