சமீப காலமாக, பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வரும் செல்ல பிராணிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் தங்களுடைய செல்ல பிராணிகள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இவர்களை தொடர்ந்து, தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா தன்னுடைய செல்ல நாய்க்குட்டி பிறந்தநாளை நண்பர்களுடன் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.
அன்பானவர் பிறந்தநாளுக்கு முத்தத்தை அள்ளி கொடுக்கும் ரம்யா
முத்தம் வாங்கியவர் ரொம்ப அதிர்ஷசாலி என... சிறு கடுப்பில் நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.