அஜித்தின் வெற்றியால் வயித்தெரிச்சல்? வேறு ஒரு ஹீரோவுக்கு எழுதிய கதையை ஆட்டையை போட்டு நடித்த விஜய்!

Published : Oct 23, 2024, 01:10 PM ISTUpdated : Oct 23, 2024, 01:17 PM IST

நடிகர் விஜய் வேறு ஒரு ஹீரோவுக்கு எழுதிய கதையில் நடித்தது குறித்து தயாரிப்பாளர் PL தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.  

PREV
14
அஜித்தின் வெற்றியால் வயித்தெரிச்சல்? வேறு ஒரு ஹீரோவுக்கு எழுதிய கதையை ஆட்டையை போட்டு நடித்த விஜய்!
Actor Vijay

தமிழ் சினிமாவில் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும் பிரபலமானவர் பி. எல். தேனப்பன். இவர் ஸ்ரீ ராஜ்லட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக, சிம்புவின் வல்லவன், கமல் நடித்த பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், மற்றும் காதலா காதலா போன்ற ஹிட் படங்களை தயாரித்தவர்.

24
Vaali Movie Success

மேலும் முத்து, குரங்கு பொம்மை, ஸ்கெட்ச், பலூன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் ஏராளமான படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், தயாரிப்பு மேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் தளபதி விஜயை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டாராம். அந்த சமயத்தில் தான், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அஜித் நடிப்பில் 'வாலி' திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தை பார்த்த விஜய், தயாரிப்பாளர் தேனப்பனிடம் 'வாலி' படத்தை பார்த்தேன், மிகவும் அருமையாக இருந்தது. அந்த இயக்குனரை கூப்பிடுங்கள் அவர் கதை வைத்திருந்தால் அவரின் படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

34
PL Thenappan

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா 'குஷி' படத்தை நடிகர் பிரபு தேவாவுக்கு எழுதி வைத்திருந்த நிலையில்... அந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருந்தார். தேனப்பன் ஏ.எம்.ரத்னம் எஸ்.ஜே.சூர்யா கதையில் விஜய் நடிக்க ஆசை படும் தகவலை கூறியுள்ளார். இடையில் முக்கியமான வேலை காரணமாக தேனப்பன் லண்டன் சென்று விட்டு, திரும்புவதற்குள்.. பிரபு தேவாவை குஷி படத்தில் இருந்து நீக்கிவிட்டு, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் 'குஷி' படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்ததாம்.

44
Vijay not First Choice in Kushi

இந்த தகவலை, தயாரிப்பாளர் ஏ.எல்.தேனப்பன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறிய நிலையில்... விஜய் அஜித்தின் வெற்றியை பார்த்து வயித்தெரிச்சல் பட்டு தான், பிரபு தேவா கதையை ஆட்டையை போட்டு நடித்துள்ளார் என விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். விஜய் தன்னுடைய 69-ஆவது படத்தையும், அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories