தளபதி விஜய் விழியகம்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கண் தான செயலி அறிமுகம்

Published : Dec 21, 2022, 12:45 PM IST

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

PREV
14
தளபதி விஜய் விழியகம்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கண் தான செயலி அறிமுகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன்மூலம் பல்வேறு உதவிகளை  செய்து வருகிறார்.

24

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அவர்களையெல்லாம் ஆண்டுதோறும் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை செய்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக இந்த சந்திப்பு நடக்காமல் இருந்து வந்தது.

இதையும் படியுங்கள்... ஹீரோயின மதிக்காம ஓரமா நிக்க வச்சிடுவாங்க... பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை போட்டுடைத்த நயன்தாரா

34

இதையடுத்து இந்த ஆண்டு தற்போது மாவட்ட வாரியாக சந்திப்பு மேற்கொண்டு வருகிறார் விஜய். அதன்படி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கமகமவென பிரியாணி விருந்து வைத்து அவர்களிடம் ஆலோசனையும் மேற்கொண்டார்.

44

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... ரூ.400 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! தளபதி 68 குறித்து தீயாய் பரவும் தகவல் - இயக்கப்போவது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories