ஹீரோயின மதிக்காம ஓரமா நிக்க வச்சிடுவாங்க... பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை போட்டுடைத்த நயன்தாரா

Published : Dec 21, 2022, 12:01 PM IST

கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, தான் பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை கூறி உள்ளார்.

PREV
14
ஹீரோயின மதிக்காம ஓரமா நிக்க வச்சிடுவாங்க... பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை போட்டுடைத்த நயன்தாரா

நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அனுபம்கேர், நடிகர் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

24

பொதுவாக நடிகை நயன்தாரா, முன்னணி ஹீரோயினாக உயர்ந்த பின்னர் பட விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். தான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவர் நோ சொல்லிவிடுகிறார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா, நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அதில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலை அடிச்சுதூக்க வருகிறது ‘கேங்ஸ்டா’.. துணிவு 3-வது சிங்கிள் அப்டேட் இதோ

34

அவர் பேசியதாவது : “என்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களாகவே நிறைய வந்தன. அப்போது ஏன் ஹீரோயின்ஸுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இல்லாமலே இருக்கிறது என தோன்றும். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ லாஞ்சுக்கு போனாகூட எங்கயாச்சும் ஓரமா நிக்க வச்சிருவாங்க. ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது. ஹீரோயின்களைப் பற்றி அதிகமா பேச மாட்டாங்க. அதனால் தான் நான் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன்.

44

நாம் ஒரு நல்ல இடத்துக்கு வந்தபின்னர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணி இருந்தான். ஆனால் நான் அதை பாலோ பண்ணவில்லை. சினிமாவில் பெண்களும் சமமா பார்க்கப்படனும்னு நான் ஆசைப்பட்டேன். அப்போ அது இல்ல ஆனா இப்போ நிறைய படங்கள் பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. இப்போ நிறைய தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன் வருகிறார்கள். இதெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என அந்த பேட்டியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... அதர்வா இல்லையாம்... வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தட்டித்தூக்கிய பாலா..!

Read more Photos on
click me!

Recommended Stories