வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலை அடிச்சுதூக்க வருகிறது ‘கேங்ஸ்டா’.. துணிவு 3-வது சிங்கிள் அப்டேட் இதோ

First Published | Dec 21, 2022, 10:49 AM IST

வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலுக்கு போட்டியாக தற்போது துணிவு படக்குழுவும் அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.

கோலிவுட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் துணிவு மற்றும் வாரிசு படங்களைப் பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. இந்த இரண்டு படங்களும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. 9 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே செல்கிறது.

படம் ரிலீசுக்கு முன்னர் இப்படங்களின் அப்டேட்டுகளும் போட்டி போட்டு வெளியிடப்படுகின்றனர். அதன்படி முதலில் ரஞ்சிதமே பாடலுக்கு போட்டியாக சில்லா சில்லா என்கிற பாடலை வெளியிட்டனர். இதையடுத்து சிம்பு பாடிய தீ தளபதி பாடலுக்கு போட்டியாக துணிவு படத்தில் இருந்து காசேதான் கடவுளடா என்கிற பாடல் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... வசூலில் சரிவை சந்தித்த ‘அவதார் 2’... இந்தியா மற்றும் உலக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Tap to resize

இதையடுத்து வாரிசு படத்தில் இருந்து நேற்று அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. சின்னக்குயில் சித்ரா பாடியிருந்த இப்பாடல் மனதை வருடும் வகையில் இருப்பதாக ஏராளமானோர் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலுக்கு போட்டியாக தற்போது துணிவு படக்குழுவும் அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கு கேங்ஸ்டா என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்பாடலை ஷபீர் சுல்தான் பாடி உள்ளதாகவும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இப்பாடல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இது வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடல் சாதனைகளை அடிச்சுதூக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அம்மாவின் செண்டிமெண்ட் நிறைந்த 'வாரிசு படத்தின் 3-வது சிங்கிள் பாடல் வெளியானது!

Latest Videos

click me!