Jana Nayagan Day 5 Box Office : நான் ஸ்டாப் ஆக வசூலை அள்ளும் ஜனநாயகன்... 5ம் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?

Published : Jul 28, 2026, 09:49 AM IST

Jana Nayagan Box Office : எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் 5ம் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Jana Nayagan Movie Day 5 Box Office

தளபதி விஜய் நடிச்ச 'ஜனநாயகன்' படம் ஜூன் 23-ம் தேதி தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆச்சு. விஜய், தமிழ்நாட்டு முதலமைச்சரா ஆன பிறகு, இதுதான் அவரோட கடைசி சினிமா பயணம். இதனால, இந்தப் படத்தை தியேட்டர்ல திருவிழா மாதிரி கொண்டாட ரசிகர்கள் ரொம்ப ஆவலா காத்துட்டு இருந்தாங்க. அவங்க எதிர்பார்த்த மாதிரியே, படத்துக்கு பெரிய வரவேற்பு கொடுத்திருக்காங்க. ஆனா, ஒரு படமா 'ஜன நாயகன்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் கிடைக்குது. 'இது விஜய்யோட கடைசி படம்ங்கிறதால ஒரு தடவ பாக்கலாம்'னு சோஷியல் மீடியாவுல பலரும் கருத்து சொல்றாங்க.

Jana Nayagan OTT: ஓடிடியில் எங்கு, எப்போது வெளியாகிறது 'ஜன நாயகன்'? ரசிகர்கள் காத்திருக்கும் அப்டேட்

24
வசூலில் தூள் கிளப்பும் ஜனநாயகன்

இன்னும் சிலர், 'படம் முழுக்க தளபதி ஷோ தான்'னும் சொல்றாங்க. அதே சமயம், 'படம் பைசா வசூல்'னும் சில ரசிகர்கள் கொண்டாடிட்டு வர்றாங்க. இந்த நிலையில, 'ஜன நாயகன்' படத்தோட கலெக்‌ஷன்ல பெரிய வளர்ச்சி இருக்குன்னு சாக்னில்க் (Sacnilk) தளம் ரிப்போர்ட் பண்ணியிருக்கு. உலக அளவுல இந்தப் படம் நான்கு நாட்களில் 217.48 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கிறதா அந்த ரிப்போர்ட் சொல்லுது. ஜனநாயகன் திரைப்படம் வார இறுதி நாட்களில் வசூல் வேட்டையாடினாலும் வார நாட்களில் எந்த அளவுக்கு வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

Jana Nayagan: 'விஜய் நடிகர் மட்டுமில்ல, ஒரு எமோஷன்' - ரசிகர்களின் கண்களை குளமாக்கிய ஜனநாயகனின் அந்த 1 நிமிட காட்சி

34
5ம் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?

ஆனால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம், வார நாட்களிலும் வசூலில் தூள் கிளப்பி உள்ளது ஜனநாயகன். அதன்படி திங்கட்கிழமையான நேற்று, அப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.10.15 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 5 நாட்களில் 157.74 கோடி வசூலித்திருக்கிறது. நேற்று மட்டும் ஓவர்சீஸில் இப்படம் ரூ.4 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் 5 நாட்களில் ஓவர்சீஸில் மட்டும் ஜனநாயகன் திரைப்படம் ரூ.75.50 கோடி வசூலித்துள்ளது. தற்போது வரை ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ.233.24 கோடி வசூலித்திருக்கிறது.

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ

44
ஜனநாயகன் டீம்

இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு 'A' சர்டிபிகேட் கொடுத்திருக்கு. படத்தை எச். வினோத் இயக்கியிருக்கார். 'ஜன நாயகன்' படத்துல பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதான்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கு. தரமான படங்களை தயாரிச்ச வெங்கட் கே. நாராயணா, கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் சார்பா இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார். தளபதி விஜய்க்கு பிடிச்ச மூணு இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன், இவங்கள 'தளபதி பாய்ஸ்'னு செல்லமா சொல்வாங்க. இவங்க மூணு பேரும் 'ஜன நாயகன்' படத்துல கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோல்ல வந்திருக்காங்க.

Jana Nayagan Viral Videos : படம் பார்க்க வந்த த்ரிஷா..கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்! வீடியோ உள்ளே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories