Published : Jan 09, 2026, 05:00 PM ISTUpdated : Jan 09, 2026, 05:25 PM IST
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் வரும் 21ம் தேதி வரை படத்தை வெளியிட முடியாது.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு உடனே சென்சார் சர்டிபிகேட் வழங்க தனி நீதிபதி இன்று (ஜனவரி 9) காலை தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
24
பட தயாரிப்பு நிறுவனத்தை விளாசிய நீதிபதிகள்
மேலும் வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனால் 21ம் தேதி வரை படத்தை வெளியிட முடியாததால் ஜனநாயகன் விஜய்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கை இன்று மதியம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''நீங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?
வெறும் 10 அல்லது 12 மணி நேரத்தில் உத்தரவு வழங்க வேண்டும் எனக்கூறினால் என்ன அர்த்தம்? சென்சார் சான்றிதழ பெற சில காலம் காத்திருக்க முடியாதா? சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தை வெளியிடுவீர்கள்?'' என்று படத்தயாரிப்பு நிறுவனத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
34
இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை
தொடர்ந்து தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''இந்த வழக்கை இன்றே மேல்முறையீடு செய்ய என்ன அவசரம் வந்தது?'' என்று கூறினார்கள். மேலும் ''இந்த வழக்கை 2 நாட்களில் முடிக்க வேண்டிய அளவுக்கு என்ன அவசரம் உள்ளது? இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை. வழக்குகளுக்கு என்று ஒரு நடைமுறை உள்ளது'' என்று படத் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறினார்கள்.
தொடர்ந்து தணிக்கை வாரியம் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜனநாயகன் படத்தை 21ம் தேதி வரை ரிலீஸ் செய்ய முடியாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.