யங் லுக்கில் விஜய்..செட்டிலிருந்து கசிந்த நியூ லுக் போட்டோஸ்.. 66 -ல் இணைந்த பிரபல நடிகை!

Kanmani P   | Asianet News
Published : Jun 09, 2022, 12:39 PM ISTUpdated : Jun 09, 2022, 12:48 PM IST

'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
14
யங் லுக்கில் விஜய்..செட்டிலிருந்து கசிந்த நியூ லுக் போட்டோஸ்.. 66 -ல் இணைந்த பிரபல நடிகை!
Thalapathy 66

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய், வம்ஷி பைடிபள்ளியுடன் இணைந்து ' தளபதி 66 ' படத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்திருந்தனர். இதையடுத்து இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.அந்த செட்டில் இருந்து தற்போது விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், 'தளபதி 66' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யின் படம் சமூக ஊடகங்களில் கசிந்தது.

24
VIJAY 66

மேலும் நடிகர் நீல நிற டீ சர்ட்,  வெளிர் பழுப்பு நிற கோட்டு போன்ற சட்டையுடன் காணப்பட்டார். விஜய்யின் தோற்றம் 'தலைவா' படத்தின் தோற்றத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் இதில் அவர் தாடியுடன் இருக்கிறார். படப்பிடிப்பில் இருந்து அவரது படமும் கசிந்துள்ள நிலையில் புதிய அப்டேட்டாக நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

34
VIJAY 66

'மின்சார கண்ணா', 'வில்லு' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் குஷ்பு, இப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, அடுத்த ஷெட்யூலுக்கு முன்பாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

44
Vijay 66

உணர்ச்சிப்பூர்வமான நாடகம் என அறிவிக்கப்பட்ட 'தளபதி 66' படத்தில் விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தனா உடன் பிரகாஷ் ராஜ் , பிரபு, ஜெய சுதா, யோகி பாபு , ஷாம் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.. தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார்.

 

Read more Photos on
click me!

Recommended Stories