Published : Jun 09, 2022, 11:05 AM ISTUpdated : Jun 09, 2022, 11:45 AM IST
Nayanthara Vignesh Shivan wedding : நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தில் கலந்துகொள்ள பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, சுமார் 7 ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பின் வெற்றிகரமாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் எனும் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
211
திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நடன இயக்குனர் கலா மாஸ்டர் தனது கணவருடன் வந்து கலந்துகொண்டார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
311
அதேபோல் பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கானும் நடிகை நயன் தாராவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் திருமணத்திற்கான டிரெடிஷ்னல் உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
411
இசையமைப்பாளர் அனிருத்தும், அவரது பெற்றோரும் கலந்துகொண்டனர். பின்னர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தார். நட்சத்திர தம்பதிகளான ராதிகாவும், சரத்குமாரும் ஜோடியாக வந்து நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
511
பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பாரம்பரிய உடை அணிந்து வந்து நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
611
இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியா உடன் வந்து நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்றார். அதேபோல் பிகில் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நடிகை ரெபா மோனிகா ஜானும் தனது கணவருடன் வந்து நயன்தாரா திருமணத்தில் கலந்துகொண்டார்.
711
இதுதவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விக்கி - நயன் ஜோடியை நேரில் வாழ்த்தினார். அதேபோல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் வந்து நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
811
நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரும் நேரில் வந்து விக்கி - நயன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
911
நடிகர் கார்த்தி நடிகை நயன்தாராவுடன் காஷ்மோரா என்கிற வரலாற்று படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1011
பிரபல தொகுப்பாளினியுனியும் நடிகை நயன்தாராவின் நெருங்கிய தோழியுமான திவ்யதர்ஷினி என்கிற டிடியும் திருமணத்தில் கலந்துகொண்டார்.
1111
நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த போது இயக்குனர் அட்லீயும், ஷாருக்கானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.