தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனனான இயக்குனர் விக்னேஷ் சிவனை இன்று கரம் பிடித்துள்ளார். இன்று காலை 8:30 மணிக்கு இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
24
திருமண பந்தத்தில் இணைந்துள்ள விக்கி - நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேபோல் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
34
திருமணம் முடிந்ததும் புதுமணத்தம்பதிகள் ஹனிமூனுக்கு தான் செல்வர். அதேபோல் நயனும் விக்கியும் ஹனிமூன் கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு ஹனிமூனெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் நயன்தாரா.
44
அவரது இந்த முடிவுக்கு காரணம் அவர் கைவசம் உள்ள படங்கள் தானாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, திருமணம் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு தான் செல்ல உள்ளாராம். மேற்கண்ட பட வேலைகளை முடித்த பின்னரே ஹனிமூன் செல்ல உள்ளதாம் இந்த காதல் ஜோடி.