தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நயன்தாரா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதிலும், தமிழில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார்.
இவர் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக உருவெடுத்தார். சினிமாவில் வெற்றி கிடைத்தாலும் அவரது முதல் இரண்டு காதல்கள் தோல்வியை தான் கொடுத்தன. இருப்பினும் காதல் மீதான நம்பிக்கையை கைவிடாத நயன், கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.
நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மலந்த காதல், இன்றளவும் சக்சஸ்புல்லாக நீடித்து வருகிறது. சுமார் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி தற்போது தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.