விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், 200-க்கும் மேற்பட்ட சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி உள்ளதால், இந்த விழாவில் கலந்துகொள்பவர்கள் செல்போன் கொண்டுவரவும், வீடியோ எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், சில புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேற்று இவர்களது திருமணத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இவர்களது திருமணத்திற்காக போடப்பட்டு உள்ள பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.