இதையடுத்து சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர் அவர்களை நேற்று நள்ளிரவு அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்றுள்ள இவருடன் அவரது மனைவி உஷா ராஜேந்தரன், பிள்ளைகள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கிய உள்ளிட்டோர் சென்றுள்ளனர். நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.