தளபதி கல்யாண நாள் கொண்டாட்டம்... மதுரையில் தூள் பறக்கும் போஸ்டர்கள்...!!

First Published | Aug 25, 2020, 5:45 PM IST

21 ஆண்டுகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். 

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய் - சங்கீதா தம்பதி இன்று தங்களுடைய 21வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் தீவிர ரசிகையான இலங்கை பெண் சங்கீதாவை முதல் பார்வையிலேயே விஜய்க்கு பிடித்துப்போக, இருவீட்டார் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Tap to resize

21 ஆண்டுகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இதையடுத்து ட்விட்டரில் #SangeethaVijay என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கோவில்களில் சிறப்பு பூஜை, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், கொரோனா நிவாரணம், மரம் நடுதல் என இந்த நல்ல நாளில் பல உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில் போஸ்டருக்கு பெயர் போன மதுரை நகரில் தளபதியின் திருமண நாளை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வழக்கமாக விஜய் பிறந்த நாள், பட ரிலீஸ் போன்ற சமயங்களில் ஏதாவது அரசியல் நெடி பறக்கும் போஸ்டர்களை ஒட்டி, பிரச்சனையை கிளம்பி விடும் ரசிகர்கள், இந்த முறை கல்யாண நாளில் அப்படி எதுவும் செய்யவில்லை.
எங்கள் உயிருக்கும் உயிரின் உறவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என கவிதையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சோசியல் மீடியாவிலும் தாறுமாறு வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!