தமிழில் நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா அறிமுகமான அமரர் காவியம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை மியா ஜார்ஜ்.
இவர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நேற்று இன்று நாளை படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தமிழை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
இவரால் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்து விட்டார்.
அந்த வகையில் நேற்று மியா ஜார்ஜுக்கும் - அஷ்வின் பிலிப் என்பவருக்கும் தேவாலயத்தில் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
லைட் பிங்க் நிற உடையில் தேவதை போல் மின்னினார் மியா
இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள மணமகன் அஸ்வின் சியான் நிறத்தில் ப்ளேசர் அணிந்து, இருவருமே பார்க்க அழகிய ஜோடிகளாக இருந்தனர்.
மிகவும் கிளாசியாக நடந்த இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கிருஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்த சடங்கு நடந்தது.
தற்போது மியா ஜார்ஜின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உறவினர்களுடன் கியூட் போஸ் கொடுக்கும் மியா