நடிகர் விஜய் நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்கு பின் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, ஷான் டாம் சாக்கோ, செல்வராகவன், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து இருக்கிறார். அவரது இசையில் இதுவரை வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, பீஸ்ட் மோடு ஆகிய 3 பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மேலும் மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு நிர்மல் குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ் மொழியில் தயாராகி உள்ள இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் விஜய் அணிந்துள்ள ரத்தக்கறையுடன் கூடிய சட்டையை பிரத்யேகமாக ஆர்டர் செய்து அதனை அணிந்தபடி படம் பார்க்க உள்ளதாக விஜய் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.