இவர்களது திருமணம் பஞ்சாபி முறைப்படி ரன்பீரின் பாந்த்ரா இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 13 முதல் 18 வரை நடைபெற உள்ள திருமண விழாவில் ஏப்ரல் 13 ஆம் தேதி மெஹந்தி விழா, ஏப்ரல் 14 ஆம் தேதி சங்கீத், ஏப்ரல் 15 ஆம் தேதி அவர்களது திருமண தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.