'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்... பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக் குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்ட நிலையில், இன்று மிகப்பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் நடந்து வருகிறது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், குஷ்பூ, பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.