OTTக்கு ரூ.200 கோடிலாம் கம்மிங்க.. தியேட்டரில் இதவிட அதிகவசூல் அள்ளுவோம்- வைரலாகும் லைகர் நாயகனின் பழைய டுவிட்

Published : Aug 26, 2022, 07:45 AM ISTUpdated : Aug 26, 2022, 09:52 AM IST

Liger : லைகர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட கடந்த ஆண்டு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.200 கோடி கொடுக்க முன் வந்துள்ளது.

PREV
14
OTTக்கு ரூ.200 கோடிலாம் கம்மிங்க.. தியேட்டரில் இதவிட அதிகவசூல் அள்ளுவோம்- வைரலாகும் லைகர் நாயகனின் பழைய டுவிட்

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் தேவரகொண்ட நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் லைகர். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவான இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தனர்.

24

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்த இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை நடிகை சார்மி, இந்தி இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

34

சுமார் ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசானது. வெளியானது முதல் படு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது இப்படம். இதன் முதல் ஷோவிலேயே இப்படம் மிகப்பெரிய பிளாப் படமாக அமையும் என்பதை கணித்துவிடும் அளவுக்கு படம் பார்த்தவர்கள் எல்லாம் படத்தை கழுவி ஊற்றி இருந்தனர்.

இதையும் படியுங்கள்... வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்

44

இதனிடையே நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பழைய டுவிட் ஒன்று வைரலாகி வருகிறது. லைகர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட கடந்த ஆண்டு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.200 கோடி கொடுக்க முன் வந்துள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, “அதெல்லாம் ரொம்ப கம்மி, நாங்க தியேட்டரில் இதைவிட அதிக கலெக்‌ஷன் அள்ளுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த டுவிட் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த மொக்கை படத்துக்கு தான் இவ்ளோ பில்டப் கொடுத்தீங்களா என்றும், பேராசை பட்டு இப்படி ஒரு சான்ஸை மிஸ் பண்ணீட்டிங்களே என்றும் விஜய் தேவரகொண்டாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஹிருத்திக் ரோஷன் வேஸ்ட்... விஜய் சேதுபதி தான் பெஸ்ட் - இந்தி ‘விக்ரம் வேதா’ டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories