நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் ஆறாவது சீசன் துவங்க உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் அவ்வப்போது வெளியாகி வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இந்த சீசன் குறித்த முக்கிய தகவலை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகார பூர்வமாக அறிவித்துளளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் விஜய் டிவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும், தகுதி வாய்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வீடியோவில் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ நடித்துள்ளார்.
இதையடுத்து ஏராளமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது உறுதியாகியுள்ளது.