சீரியல் நாயகியாக இருந்து சீரியலின் உள்ளே வந்தாலும், சிறப்பான நடிப்பாலும்... அழகாலும் ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். ஹீரோயினாக மட்டுமே வெள்ளித்திரையில் நடிப்பேன் என அடம்பிடிக்கும் இளம் நடிகைகள் மத்தியில், மிகக்குவம் கூலாக எந்த அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் கெத்து காட்டி வருகிறார்.
தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, ஊர் குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். அதோடு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். நடிகர், அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் தொடரில் நடித்தார் இந்த வெப் தொடர் சோனி லைவ்வில் வரும் 19ஆம் தேதி வெளியானது. தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவது குறித்தும், அதன் பின்னணி என்ன எப்படி படங்கள் திருடப்படுகிறது என விறுவிறுப்பான கதைக்களத்தோடு இந்த தொடர் வெளியானது.இதை இயக்குனர் அறிவழகன் இயக்கி இருந்தார்.