நடிகர் விஜய் - சங்கீதா குறித்த பிரிவினை வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனக்கசப்புகள் நீங்கி இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போது தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாகவும் உருவெடுத்துள்ள 'தளபதி' விஜய் குறித்த எந்தவொரு செய்தியும் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அரசியல் வருகையை விடவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களே சமூக வலைதளங்களில் அதிகமாக ஒலித்து வந்தன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருவது குறித்த செய்திகள் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சிலர் சிறுமைப்படுத்தியும் பேசும் நிலை உருவாகியது.
25
எதிர்பாராத திருப்பம்
சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒரு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சிறிய மனக்கசப்புகள் மறைந்து, விஜய் மற்றும் சங்கீதா மீண்டும் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், பரஸ்பர அன்பின் காரணமாகவும் அவர்கள் இந்த முதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
35
முதல்வர் பதவியேற்பு விழாவில் சங்கீதா?
இந்த மகிழ்ச்சியான செய்தியின் அடுத்த கட்டமாக, ஒரு பிரம்மாண்டமான தகவல் கசிந்துள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த இலக்காகக் கருதும் முதல்வர் பதவியேற்பு விழாவில் சங்கீதாவுடன் இணைந்து பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் எம்எல்ஏ நாற்காலியில் அமர்ந்தாலும் இது சாத்தியம் என கூறப்படுகிறது. இது வெறும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அவரது அரசியல் பிம்பத்திற்கும் ஒரு மிகப்பெரிய பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கு முன்பே இருவரும் வாக்களிக்க சேர்ந்தே போனால் அது விஜய்க்கு கூடுதல் பலம் எனவும் அவர் கூறியுள்ளனர். குடும்பத் தலைவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது, ஒரு மக்கள் தலைவனாக அவரை மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாகப் பதிய வைக்கும் என்றும் பொதுமக்கள் பலர் கருத்து தெரவித்துள்ளனர்.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து, விஜய்யின் இல்லம் அமைந்துள்ள நீலாங்கரை பகுதி தற்போது திருவிழா கோலம் பூண்டுள்ளது.
ரசிகர்களின் கொண்டாட்டம்: பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் இந்தத் தகவலைக் கொண்டாடி வருகின்றனர்.
மகிழ்ச்சியில் குடும்பம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேரவிருப்பது, அந்தப் பகுதிக்கே ஒரு புதிய பொலிவைத் தந்துள்ளது.
55
ஒன்று சேர்ந்த குடும்பம்.! தொண்டர்கள் குஷியோ குஷி.!
தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் எவருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு பொது ஆளுமையாக இருக்கும்போது அத்தகைய சவால்களைக் கடந்து மீண்டும் இணைவது ஒரு நல்ல முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், சங்கீதாவின் வருகை அவருக்குப் பெரும் மனவலிமையைத் தரும் என்பதில் ஐயமில்லை. நீலாங்கரை இல்லத்தில் மீண்டும் ஒலிக்கப்போகும் சிரிப்பொலி, தமிழக அரசியலிலும் ஒரு புதிய அலைவரிசையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.