கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் ஜேசன் சஞ்சய்.
அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.
அதனை முடிந்ததும் அப்பா விஜய்யைப் போலவே, இந்தியா வந்ததும் ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் தற்போது வரை விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு, “ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள இந்தக் குறும்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தளபதி விஜய் மகன் வீடியோ கேம் விளையாட, அவரை செல்லமாக கட்டி அணைத்து குறும்புத்தனம் செய்யும் புகைப்படம் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.